fbpx
Others

தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடப்பது என்ன…?

 தேனி பெரியகுளம் சாலையில், தேனி அல்லிநகரம் நகராட்சியில் சாலை ஓர வியாபாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய பதிவுகள் பெற்று சில சமூக விரோதிகளால் கடை நடத்த முட்டுக்கட்டை !!! தேனி மாவட்டம் தேனியில் வசித்து வருகின்ற , படித்து வேலை வாய்ப்பு இல்லாமல் தான் சுயமாக தொழில் தொடங்க முறைப்படி சாலை ஓர வியாபாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற பதிவுகள் பெற்று கடை நடத்த முற்படும் போது, அருகில் உள்ள சில சமூக விரோதிகளால் முட்டுக்கட்டை  அரசால் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க ஆங்காங்கே பல பயிற்சிகளை வழங்கி இவர்கள் சுயமாக தொழில் தொடங்க அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு முகாம்களும், அரசு உதவியுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்ற வேளையில், இவர்களை தொழில் தொடங்க முட்டுக்கட்டை போட இவர்கள் யார்???….. சாலைகள் இவர்களுக்கு அரசால் இந்த சமூக விரோதிகளுக்கு பட்டா போட்டு கொடுக்க பட்டுள்ளதா ??? சாலைகள் அனைவருக்கும் பொதுவானது! சாலைகளில் வியாபாரம் செய்கின்ற சாலையோர வியாபாரிகள் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாமலும், பொருட்கள் நடந்து செல்ல இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து கொள்ளத் தான் இந்த சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வழங்கப்படுகிறது….. சாலை ஓர வியாபாரிகள் வணிகம் செய்ய தடுக்க இவர்கள் யார்? சாலை ஓரங்களில் தேவையில்லாமல் வாகனங்கள் நிறுத்தவும் கூடாது…..சாலை வாகன பார்க்கிங் குகள் அல்ல……முறைப்படுத்தப்பட்ட இடங்களை தவிர்த்து தேவையின்றி வாகனங்களை நிறுத்தி வைக்க போக்குவரத்து காவல்துறை நிர்வாகமும் அனுமதிக்கக்கூடாது? இவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேனி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்……………..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close