fbpx
Others

தேனியில்-போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

அனைவருக்கும் வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் இன்றைய தினம் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தேனி ஆர்.சி.உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது.முன்னதாக விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.முத்து மாதவன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதுவிலக்கு ஆயத்தீர்வை தே.துணை ஆட்சியர் வா.முத்துலட்சுமி போதை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க 550 மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.இராமநாதன் தேனி மாவட்ட ரெட் கிராஸ் துணை சேர்மன் திரு.மகாராஜன் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.மணி, திரு.சிதம்பரநாதன் ஜே.ஆர்.சி. ஆலோசகர்கள் திரு.பார்த்திபன், திரு.ஜெகநாதன்,திருமதி.ஆரோக்கியஅமலி,திரு.ஜெயராமன் மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பேரணி மதுரை ரோடு, நேரு சிலை, பெரியகுளம் ரோடு வழியாக பயணித்து பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.பின்னர் பள்ளி வளாகத்தில் ஜெ.ஆர்.சி. மாணவ மாணவியர்களின் மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்பட்டது.ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. வேல்முருகன் ஆண்டிபட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close