தேனியில் தெரு நாய்களின் தொல்லைநகராட்சி நடவடிக்கை எடுக்குமா…???
தேனிமாவட்டம், தேனியில் தெரு நாய்களின் தொல்லை ! பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது தெருவில் இருக்கும் நாய்களால் பீதி!! இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்??? தேனி மாவட்டம் தேனியில் அனைத்து தெருக்களிலும் நாய்களால் பெரும் தொல்லை… குறிப்பாக தேனி சொக்கர் தெருவில் கூட்டமாக தெருவில் நடந்து செல்லும் நபர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் மீதும் இந்த தெரு நாய்கள் பாய்ந்து சென்று கடிக்க விரட்டுகிறது …. இங்கு மட்டும் இல்லாமல் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வன வழிச்சாலை திருப்பத்திலும் ( டிபன் – கோழிக்கடை அருகில்) இவ்வாறு அனைத்து தெருக்களிலும் நாய்களால் பெரும் தொல்லை…. இந்த நாய்கள் மூலம் பெரும் நாய்க்கடி ( ஹெபடைடிஸ்) ஏற்படும் முன்பாக இந்த நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்! உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம்!!!….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.