fbpx
Others

தேனியில் உள்ள ராஜ வாய்க்கால் பிரச்சினையில் மீண்டும் ஆக்கிரமிப்பு-நடவடிக்கை?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் உள்ள ராஜ வாய்க்கால் பிரச்சினையில் மீண்டும் ஆக்கிரமிப்பு? 60 அடி ராஜ வாய்க்கால் 15 அடியாக மாற்றம் செய்து நூதனக் கொள்ளை ? அரசும்,சம்மந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கை எடுப்பார்களா??? தேனி மாவட்டம், தேனியில், தேனிக்கு நீர்வள ஆதாரமானகொட்டக்குடி ஆற்றின் கிளையாக உள்ள ராஜவாய்க்கால்40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போனது…
ஆனால்…தற்பொழுது தென்பகுதியின் அன்னா ஹசாரே ராஜதுரை போன்ற சமூக ஆர்வலர்கள் ஒரு சிலரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தற்போது உயிர் பெற்று வரும் ராஜ வாய்க்கால் மேலும் ஆக்கிரமிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.!!!கிட்டத்தட்ட 100 ஹெக்டேர் அளவுக்கு விவசாய பாசனத்திற்காகவும் ,குடிநீருக்காகவும் ராஜ வாய்க்கால் நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால்சுமார் 60 அடி அகலம் கொண்ட இந்தராஜ வாய்க்கால் , தற்பொழுது சில அரசியல் சூழ்ச்சியாலும் ,அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலும் 15 அடியாக சுருக்கப்பட்டு மீண்டும் ராஜவாய்க்கால்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகமும் தலையிட்டு ராஜ வாய்க்காலின் அகலத்தை 60 அடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று புரட்சித்தமிழர் கட்சி, மற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடகங்களும், தேனி மாவட்ட பொதுமக்கள் சார்பாக வலியுறுத்துகிறார்கள்…. இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடனடியாக தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்!!!..நடவடிக்கைஎடுப்பார்களா?  அரசுசெய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close