fbpx
Others

தேனிமாவட்டம்–ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்எப்போது சரியாகும்..

தேனிமாவட்டம் தேனியில் தென் மாவட்ட அன்னா ஹசாரே ராஜவாய்க்கால் ராஜதுரையின் விடாமுயற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக ஊடகங்கள் மூலம் போராடி நீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் நீர் நிலைகள் மீது உள்ள ஆக்கிரப்புகளை அகற்றிட வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தப்பட்டு வருகின்ற வேளையில், இப் பணியை செய்ய விடாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், மற்றும் ஒரு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டு இப் பணிகளை துரிதமாக, விரைவாக செய்ய விடாமல் ஏனோ தானோ என்று மந்த நிலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் நகராட்சி நிர்வாகம், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர், நகர் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் இவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றதில் , பெரியகுளம் சாலை, பகவதி அம்மன் கோயில் தெரு, மதுரை சாலை, ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரப்புகளை பதினைந்து தினங்கள் கழித்து கண்டிப்பாக அகற்றும் பணி நடக்கும் என்று கூறி விட்டு பெயரளவில் பொம்மையகவுண்டன்பட்டியில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரப்புகளை சிறிது அகற்றிவிட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டது ஏன்??? இவை எல்லாம் வெறும் கண்துடைப்பு தானா ??? மேலும் ஏற்கனவே தெருவிலும், சாலைகளில் வண்டிகளை வைத்து நிரந்தரமாக அந்த இடத்தில் தார்பாலின், தகரம், மேற்கூரையிட்டு வியாபாரம் செய்து வருபவர்களுக்கு, மேலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் நடைவண்டிகளை கொடுத்து ஒரே இடத்தில் நிறுத்தி வைக்காமல் வியாபாரம் செய்ய சொன்னால், ஏற்கனவே தெருவிலும் சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடையினை ஒட்டியே இந்த வண்டியையும் நிறுத்தி மேலும் தெருக்களிலும்,சாலைகளையும் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் இந்த நடைவண்டிகள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகளுக்கு வழங்குவதை விட்டு விட்டு நன்றாக கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கே அந்தந்த வார்டு உறுப்பினர்களின் வேண்டப்பட்ட வர்களுக்கா வழங்கப்பட்டிருக்கிறது…………….. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் எப்படி எப்போது சரி செய்யப்படும் என்றே தெரியவில்லை??? இந்தக் குறைகளை களைவது எப்போது? இந்த ராஜவாய்க்கால் ஆக்கிரப்புகள் சம்பந்தமாக புகார்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டு கொண்டுதான் உள்ளனர்? நடவடிக்கைகள் எப்போது ??? இவற்றை உடனடியாக மாவட்ட ஆட்சியரும், நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும், தேசிய நெடுஞ்சாலை துறையினரும், துரிதமாக நடவடிக்கைஎடுப்பார்களாஎனதேனிநகரபொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்…?…………………….. அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close