தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்…..

இதற்குத் தற்போது எதிர்வினையாற்றியிருக்கும் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ஸ்டாலினிடம் நான்கு கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அதில், “ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது. இருப்பினும், ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது, அரசியலமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு எதிரானது. தேசிய கல்விக் கொள்கை – 2020, பரந்த அளவிலான ஆலோசனைகள் மூலம் உருவாக்கப்பட்டது. எனவே, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் கொள்கையை ரீதியான எதிர்ப்பில், உங்களிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். > தமிழ் உட்பட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா ? > தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா ? > தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை எதிர்க்கிறீர்களா ? > தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, ஒழுங்கமைப்பான, சமமான, எதிர்காலத்துக்கான உள்ளடக்கம் சார்ந்த கட்டமைப்பை எதிர்கிறீர்களா ? அப்படி எதுவும் இல்லை என்றால், உங்களின் அரசியல் ஆதாயங்களை விட தமிழக மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தர்மேந்திர பிரதான தெரிவித்திருக்கிறார்..