தேசிய அளவிலான சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்12 தங்கப் பதக்கம்.

தேசிய இளைஞர் தடகள விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பாக, கடந்த மாதம் கோவாவில் நேரு விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச அளவிலான கராத்தே, சிலம்பம், ஹாக்கி, ஸ்கேட்டிங், மல்யுத்தம் போன்ற போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.15 வயதுக்குட்பட்ட சிலம்பப் போட்டியில் கோவை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வடவள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் தருண் சிலம்ப விளையாட்டுகளான ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான் கொம்பு, சுருள் வாள் வீச்சு, குத்து வரிசை, வேல்கம்பு, ஆகிய பிரிவில் சர்வதேச அளவில் 6 தங்கப் பதக்கங்கள் மற்றும் தேசிய அளவில் 6 தங்கப் பதக்கங்களும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவனை ஶ்ரீ தக்சா பிராபர்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் மோகன், போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவரையும், பெற்றோர்களையும், பள்ளித்தலைமை ஆசிரியர் (பொறுப்பு), பிற ஆசிரியர்களையும் நேரில் சந்தித்து பாராட்டினார்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்