fbpx
Others

தெலுங்கானா மாநில அரசுக்கும் , கவர்னருக்கும் இடையே மோதல்

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். அதேவேளை, தெலுங்கானா கவர்னராக தமிழிசைமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தும் கவர்னர் - சுப்ரீம் கோர்ட்டை நாடிய தெலுங்கானா சவுந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, தெலுங்கானா மாநில அரசுக்கும் , கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமலும், நிலுவையில் வைத்தும், மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடந்துள்ளது. இந்த வழக்கு ஹொலி பண்டிகை விடுமுறைக்கு பின் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Related Articles

Back to top button
Close
Close