fbpx
Others

தெலுங்கானாவில் 15 நாட்கள் யாத்திரை…..!

 இன்று மராட்டியம் செல்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. மும்பை, காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடா யாத்திரை ராகுல் காந்தி எம்.பி. தலைமையில் நடந்து வருகிறது. இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதில் 61-வது நாளான இன்று ராகுல் காந்தியின் யாத்திரை தெலுங்கானாவில் உள்ள காமரெட்டியில் இருந்து மராட்டியத்தின் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள தெக்லுர் பகுதிக்குள் நுழைகிறது. இன்று இரவு 9 மணிக்கு யாத்திரை மராட்டியத்துக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய இரவில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி நாளை முதல் மராட்டியத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் தெக்லுரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை பகுதியில் ராகுல் காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவர்களை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர். நாளை முதல் வரும் 20-ந் தேதி வரை மராட்டியத்தில் 5 மாவட்டங்களில் யாத்திரையை ராகுல் காந்திதெலுங்கானாவில் 15 நாட்கள் யாத்திரை: இன்று மராட்டியம் செல்கிறார் ராகுல் காந்தி மேற்கொள்கிறார். 10-ந் தேதி நாந்தெட் மாவட்டத்திலும், 18-ந் தேதி புல்தானாவில் உள்ள சென்காவ் பகுதியிலும் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 13-ந் தேதி ஓய்வு எடுக்கிறார். ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close