fbpx
Others

தெலங்கானா–ஜெகன் மோகன் ரெட்டி–தங்கை ஷர்மிளா மீண்டும் கைது

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது ; தெலங்கானாவில் பரபரப்பு
  • தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஜெகனின் சகோதரி YS ஷர்மிளா YSRTP – YSR தெலங்கானா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, சந்திரசேகர ராவ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக விமர்சனத்தை முன்வைத்து தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ குறித்து அவதூறாக பேசியதாக, ஆந்திர மாநில முதலமைச்சரின் சகோதரியான YS ஷர்மிளா மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலங்கானா அரசுக்கு எதிராக ஷர்மிளா தொடர்ந்து பாதயாத்திரை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் அவர் தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் மகபூபாபாத் நகர் எம்எல்ஏ ஷங்கர் நாயக்கை சர்மிளா கடுமையாக விமர்சித்தார்.இதனை எதிர்த்து ஆளுங்கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மகபூபாபாத்தில் உள்ள சர்மிளாவை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி YS ஷர்மிளாவை அங்கிருந்து ஹைதராபாத்துக்கு அனுப்பியுள்ளனர். ஷர்மிளா கைதாவது முதல் முறை அல்ல, ஏற்கனவே மூன்று முறை தெலங்கானா காவல்துறை இவரை கைது செய்துள்ளது..

Related Articles

Back to top button
Close
Close