தெரு நாய்கள்.வெறிநாய்ளை கட்டுபடுத்தமுடியாத பெருநகரசென்னைமாநகராட்சி…?

தெரு நாய்கள் உணவு, இருப்பிடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வரும்போது, அவை மனிதர்களுடன் மோதல்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், நாய்க்கடிகள், விபத்துகள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கின்றன. இத்தகைய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள் நாய்களைப் பிடிக்குமாறுஅதிகாரிகளிடம்கோரிக்கைவைக்கின்றனர்.ஆனால், மற்றொருபுறம், விலங்கு நல ஆர்வலர்கள் நாய்களை விரட்டுவது, துன்புறுத்துவது போன்ற செயல்களை எதிர்க்கின்றனர். தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி போடுவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.அவற்றைஇரக்கத்துடன் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். சென்னையில் நேற்று, ஜாபர்கான் பேட்டையில் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த கருணாகரனை, அவ்வழியே பூங்கொடி என்பவர் கூட்டிக்கொண்டு சென்ற அவரின் பிட்புல் நாய் கடித்துகுத்தறியதில் அவர் உயிரிழந்தசம்பவம்.அதிர்ச்சியைஏற்படுத்தியிருந்தது
.இந்த நிலையில், வளர்ப்பு நாய்களை வெளியே கூட்டிச் செல்லும்போதுபொதுமக்களுக்குபாதிப்புஏற்படாதவகையில்என்னென்னவற்றைபின்பற்றவேண்டும்என்றுபெருநகரசென்னைமாநகராட்சிஅறிக்கைவெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன.செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டாயம்பெருநகரசென்னைமாநகராட்சியின்உரிமம்பெற்றிருக்கவேண்டும்.செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி திரியவிட்டாலோ / அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பொது மக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது.மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப் பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.