Others
தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களேநாய்க்கடி சம்பவங்களுக்குப் பொறுப்பு….
நாய்க்கடிவிவகாரங்களைத்தடுக்கமாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை. நாய்க்கடிகளால் குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு மரணம்அல்லது காயத்திற்கும், மிகப் பெரிய தொகையை இழப்பீடு நிர்ணயிப்போம். மேலும், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களேநாய்க்கடி சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். உணவிட வேண்டுமென்றால், நாய்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து கொண்டு
போய் உணவளியுங்கள்.மாநிலங்களின் கருத்துகளைக் கேட்க நாங்கள் அரை நாள் செலவிட வேண்டும். நாய்க்கடி பிரச்சினையைச் சமாளிக்க அவர்களிடம் எதாவது செயல் திட்டம்
உள்ளதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.நாங்கள்சட்டப்பூர்வவிதியைஅமல்படுத்துவதை மட்டுமே விரும்புகிறோம்.இது தொடர்பான விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.