fbpx
Others

 தூத்துக்குடி தென்திருப்பேரை பேரூராட்சியில் சுதந்திர தின விழா

 தூத்துக்குடி தென்திருப்பேரை பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரூராட்சி முன்பு மரக்கன்றுகளும் நடப்பட்டது. கோலப்போட்டி நடைபெற்றது. கோலப்போட்டியில் பரிசுபெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் அமிர்தவள்ளி, உறுப்பினர்கள் ஆனந்த், கீதா, குமரேசன், மாரியம்மாள், சீதாலெட்சுமி, ரேவதி, சண்முகசுந்தரம், கொடி, லெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். * ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகநேரியில் இருந்த 33 சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு பரிசுகளை நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம் வழங்கினார். பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பேரூராட்சி துணைத்தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சிறப்பு பரிசினை நகர பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம் வழங்கினார். பேருராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகர தி.மு.க. செயலாளர் நவநீதபாண்டியன், நகர்நல மன்ற தலைவர் பூபால் ராஜன், காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ராமஜெயம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட டவுன் பஞ்சாயத்துகளில் சுதந்திர தினம்

Related Articles

Back to top button
Close
Close