fbpx
Others

 தூத்துக்குடியில்பலத்தகாற்று வீசியது…..?

பொதுமக்கள்,வாகன ஓட்டிகள்கடும் அவதி

தூத்துக்குடியில் நேற்று 62 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலத்த காற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை வெயில் முடிந்த பிறகும் தாக்கம் அதிகமாக இருந்ததால், சாலையோர குளிர்பான கடைகள் அதிக அளவில் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான காற்றும் வீசியது. நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது. காற்று மாலை வரை தொடர்ந்து வீசியது. 62 கிலோ மீட்டர் தூத்துக்குடியில் நேற்று அதிகபட்சமாக 62 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் காற்று சாலைகளில் புழுதியை வாரி இறைத்தது. ரோட்டில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயணிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். பகலில் மிரட்டிய காற்று மாலை 5 மணிக்கு பிறகு அதன் வேகம் மெல்ல, மெல்ல குறைந்தது. அதேபோன்று வானமும் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த காற்று காரணமாக சில இடங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close