fbpx
Others

துணை முதல்-மந்திரி அஜித்பவார்–இந்திய அளவில் பிரதமர் மோடி வலிமையான தலைவர்

புனே, இந்திய அளவில் பிரதமர் மோடியை விட வலிமையான தலைவர்கள் யாரும் இல்லை என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார். அமித்ஷா பேச்சு தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார். தனது சகாக்களுடன் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில்இந்திய அளவில் பிரதமர் மோடியை விட வலிமையான தலைவர் யாரும் இல்லை; துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேட்டி இணைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் புனேயில் நடந்த கூட்டுறவு நிறுவனத்திற்கான நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கலந்துகொண்டார். அப்போது “நீண்ட காலத்திற்கு பிறகு அஜித்பவார் சரியான இடத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் தாமதமாக வந்து இருக்கிறார்” என்றார். இந்த நிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமித்ஷாவின் கருத்து குறித்து கேட்டதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- வலிமையான தலைவர் மாநிலத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்லவும், பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளில் பணியை முடிக்க உதவவும் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசில் சேர நான் முடிவு செய்தேன். இன்று தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான வேறு எந்த தலைவரையும் நான் தனிப்பட்ட முறையில் பார்க்கவில்லை. அவருக்கு மாற்றாகவும் யாரையும் பார்க்கவில்லை. எனது கடந்த கால அறிக்கைகளை மேற்கோள் காட்டி சிலர் என்னை விமர்சிக்கின்றார்கள். ஆனால் ஒரு மனிதன் தனது அனுபவங்களின் அடிப்படையில் பல மாறுபட்ட கருத்துக்களை கொண்டு இருக்கலாம். மராட்டியத்தில் உள்ள 44 ரெயில் நிலையங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களை சீரமைக்க பிரதமர் ரூ.25 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கி உள்ளார். கூட்டுறவு துறையில் கடந்த 20 முதல் 22 ஆண்டுகளில் எடுக்கமுடியாத தைரியமான முடிவுகளை மத்திய மந்திரி அமித்ஷா எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். விரிவான ஆலோசனை மத்திய மந்திரி அமித்ஷாவின் வருகையின்போது நடைபெற்ற கூட்டம் பற்றி நிருபர்களுக்கு பதில் அளித்த அஜித்பவார், ” கூட்டத்தில் பா.ஜனதா, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய “மகாயுதி” கூட்டணி பற்றி விவாதித்தோம். மேலும் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மாநிலத்தில் நடந்து வருகின்றன. இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சந்திப்பின்போது, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் உடன் இருந்தனர்” என்றார்

Related Articles

Back to top button
Close
Close