fbpx
Others

துணை முதல்வராக உதயநிதி பதவியேற்கவில்லையே ஏன்தெரியுமா?

பதவியேற்பு விழாவில் மேடையில் கூட ஏறாத உதயநிதி.. துணை முதல்வராக பதவியேற்கவில்லையே ஏன் தெரியுமா

தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டார். அதேபோல 4 பேர் புதிதாகவும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடந்தது. இருப்பினும், இதில் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உதயநிதி மேடை ஏறிப் பதவியேற்கவில்லை. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தது. அவ்வப்போது இது தொடர்பான தகவல்களும் வெளியாகும். குறிப்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் தரப்படும் என்று கூறப்பட்டது.சமீபத்தில் இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கூட கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மாற்றம் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது என்று மட்டும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட, மனோ தங்கராஜ் உள்ளிட்ட 3 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரம் செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். மேலும், சிலரது துறைகளும் மாற்றப்பட்டு இருந்தது.அதேபோல திமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி துணை முதல்வராக நியமிக்கும் அறிவிப்பும் அதில் இருந்தது. இது திமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன்படி இன்று மாலை 3.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உடன் நடக்கும் முதல் பதவியேற்பு விழா. இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கூட நேரடியாகக் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் கோவி செழியன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சராகப் பதவியேற்றனர். அதேநேரம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உதயநிதி மேடையில் கூட ஏறவில்லை. இதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டது என்பதை நாம் ஒரு பதவி உயர்வாகப் பார்த்தாலும் நமது நாட்டின் விதி சரி மரபுபடியும் சரி துணை முதல்வர் என்பது ஒரு பொறுப்பு தானே தவிர அரசியலமைப்பு வழங்கும் பதவி இல்லை. ஏற்கனவே அமைச்சராக உள்ள நபர் துணை முதல்வராக நியமிக்கப்படும் போது தனியாகப் பதவியேற்கமாட்டார்கள்.இதன்காரணமாகவேபுதிதாகப்பதவியேற்றஅமைச்சர்களுக்கு மட்டும் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close