fbpx
Others

“திவாலான பாகிஸ்தான்..”என்ன நடக்கிறது…..?

"திவாலான பாகிஸ்தான்.." அவ்வளவுதான்.. போட்டுடைத்த டாப் அமைச்சர்.. கதறும் பாக். மக்கள்! என்ன நடக்கிறது
  1. : பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே அந்நாடு ஏற்கனவேதிவாலாகிவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரே கூறியுள்ளார்.  இது அங்கு பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் பல்வேறு உலக நாடுகளிலும் மிகக் கடுமையான பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இலங்கை நாட்டில் இதுபோலத் தான் இக்கட்டான் ஒரு சூழல் ஏற்பட்டு நாடே ஸ்தம்பித்தது.அங்கு ஏற்பட்ட பொருளாதார குழப்பம் அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டது. இப்போது மேலும், பல நாடுகளிலும் கடுமையான பொருளாதார சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் பாகிஸ்தான்.  பாகிஸ்தானில் இப்போது மிகக் கடுமையான சூழல் நிலவுகிறது.. இதனால் அந்நாட்டு அரசு வெளிநாட்டு உதவிகளைக் கோரியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்தாலும், அது பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, வருமானத்தை அதிகரிக்க வரி மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் அங்கு அனைத்து அடிப்படை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டு இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  பாகிஸ்தானில் இப்போது ஒரு லிட்டர் பால்250ரூபாய்க்கும் ஒரு கிலோ சிக்கன் 780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், பாகிஸ்தான் திவால் ஆகிவிட்டதாக கேள்விப்பட்டதாகவும் பாகிஸ்தானின் பொருளாதார நாசமாகி வருவதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால், தண்ணீர் போன்ற அடிப்படை பொருட்களின் விலையும் உயர்ந்து விலைவாசி உச்சம் தொட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.பாகிஸ்தான் திவால் ஆகும் நிலையில் இல்லை.. ஆனால் ஏற்கனவே திவாலாகிவிட்டது என்று அவர் பரபர கருத்துகளைக் கூறியுள்ளார். அவர் பேசுகையில், “நாம் திவால் ஆன நாட்டில் வசிப்பவர்கள். பாகிஸ்தான் திவால் நிலையில் உள்ளதாகவும் பொருளாதாரம் காலியாகி வருவதாகவும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், அதெல்லாம் ஏற்கனவே நடந்துவிட்டது என்றே நான் சொல்லுவேன். இனி மக்கள் அவர்கள் சொந்தக்காலில் தான் நிற்க வேண்டும். அப்போது தான் தப்பிப் பிழைக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து முந்தைய இம்ரான் கான் அரசைக் கடுமையாகச் சாடிய அவர், “நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டு, பாகிஸ்தானில் மீண்டும் அமைதியின்மை ஏற்படக் காரணமாக இருந்ததே முந்தைய இம்ரான் கான் அரசு தான்.. அவரது இந்த காரியத்தால் தான் பாகிஸ்தானின் தலைவிதியாகப் பயங்கரவாதம் மாறியுள்ளது. சரி செய்ய வாய்ப்புகள் இருந்த போது, அவர்கள் கோட்டைவிட்டனர்.. இவர்கள் செய்த காரியங்களால் நாடே திவாலிவிட்டது. இப்போது நாங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.  பாகிஸ்தானின் திவால் ஆனதாகக் குறித்து குவாஜா ஆசிஃப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு அங்குள்ள இம்ரான் கான் கட்சி தொடங்கிப் பல எதிர்க்கட்சிகளும் கடுமையாகச் சாடி வருகின்றனர். ஷேபாஸ் ஷெரீப் அரசு வெறும் பத்தே மாதங்களில் பாகிஸ்தானை இந்த ஒரு மோசமான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டதாகச் சாடி வருகின்றனர். பாகிஸ்தான் இப்போது இக்கட்டான ஒரு பொருளாதார சூழலில் இருக்கிறது. உலக நாடுகள் உதவி செய்தால் மட்டுமே பாகிஸ்தானை மீட்க முடியும்.கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் இக்கட்டான ஒரு சூழலிலேயே இருக்கிறது. பாகிஸ்தான் 2019ஆம் ஆண்டில் 6 பில்லியன் டாலரை சர்வதேச நிதியத்திடம் இருந்து பெற்றது.. 2022இல் அங்கு எதிர்பாராத விதமாக மிக மோசமான வெள்ளம் ஏற்பட மற்றொரு 1.1 பில்லியன் டாலர்களை பெற்றது. இருப்பினும், அங்கு நிதி சூழலை மீட்கப் பாகிஸ்தான் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பணம் அளிப்பதைச் சர்வதேச நிதியம் கடந்தாண்டு நிறுத்தியது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கடுமையாகச் சரிந்துள்ளது. சில வாரங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் அளவுக்கே உள்ளதாகவும் கூறப்படுகிறது..

Related Articles

Back to top button
Close
Close