fbpx
Others

திருவாரூர் மாவட்டத்தின் சிறப்பு செய்தி…..

*🌸 திருவாரூர் மாவட்டத்தில், கல்லூரி மாணவிக்கு நிதி உதவி*

*💧மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.*

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலை – பூத்தலாங்குடி வடகரை கிராமத்தை சார்ந்த திருவாரூர் கல்லூரி ஒன்றில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் *வசந்தி* என்கிற கல்லூரி மாணவிக்கு,மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக,நிறுவன தலைவர் *திரு.ரா.சம்பத்குமார்* அவர்கள் நிர்வாகிகளுடன் இன்று (30.08.2025-சனிக்கிழமை) நேரில் சென்று கல்வி பயில நிதியுதவி வழங்கினார்.சமீபத்தில் தந்தை இறந்ததால், அவரது அம்மா முறுக்கு வியாபாரம் செய்து வரும் நிலையில், அம்மா மற்றும் சகோதரியுடன்வறுமையானநிலையில்கல்லூரிமாணவிபயின்றுவருகிறார்.நெருங்கிய உறவினர்கள்காலமாகிவிட்டதால்உதவிசெய்யயாரும்இல்லைஎன்றுதெரிவித்தனர்.இந்நிலையில், மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் *M.கார்த்திகேயன்* அவர்களின் ஏற்பாட்டில்,தலைமை ஒருங்கிணைப்பாளர்*திரு.P.சாக்ரடீஸ்,* மாநில ஒருங்கிணைப்பாளர்*ஜனாப். I.கண்ணுவாப்பா*திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் *ஜனாப்.சித்திக் முகமது*நாகப்பட்டினம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்*திரு.R.மகேஷ்* ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.வாருங்கள்… நம்மால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு செய்வோம் …   செய்திகளுக்காகஎஸ் சுரேஷ் நீடாமங்கலம்

Related Articles

Back to top button
Close
Close