fbpx
Others

திருவாரூர்—நீடாமங்கலம்பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் திருவாரூர் தஞ்சை நெடுஞ்சாலையிலும். குடந்தை மன்னார்குடி நடுவண் திகழும் வரலாற்று சிறப்புடைய பேராகும். தற்காலத்தில் நீடாமங்கலம் என்றும் தஞ்சை மராட்டிய ஆட்சி காலத்தில் யமுனாம்பாள் புரம் என்றும் சோழபேரரசர்கள் ஆட்சி காலத்தில் நீடாள்மங்கலம் என்றும் அழைக்கப்பெற்ற முதூரூம் ஆகும் இவ்வூரின் தனி சிறப்பாக ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ சந்தான ராமசுவாமி திருக்கோயில் . இரண்டு விண்ணகரங்களும் (திருமால் கோவில்களும்) மற்றும் காசி விஸ்வநாதர் சிவ ஆலயம் கோகமுகேஸவரர் சிவாலயம் உள்ளது இவற்றுள் மிகவும் சிறப்பு வாய்ந்த விண்ணகரம் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் ஆகும் சுமார் 300 வருடம் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோயில் ஆகும் இத் திருத்தலத்தை தமது சொந்த இடத்தில் கட்டி கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் நித்திய கால பூஜைகளுக்கு தனது சொத்துக்களை கோவில் பெயரில் எழுதி வைத்தார் கிருஷ்ண சாமி நாயுடு ஆவணங்கலாக 1909 ஆண்டு உயில் மற்றும் 1927 ஆம் ஆண்டு சீனிவாச நாயுடு அவர்களின் உயில் ஆதாரங்களாக உள்ளன (தற்சமயம் கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது . திருக்கோயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது) கோவிலின் பரம்பரை அறங்காவலராக கிருஷ்ணசாமி நாயுடு வழி தோன்றலான. திரு .எஸ். சுரேஷ் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்   நீடாமங்கலத்தில் சந்தானராமசாமி திருகோவிலுக்கு பின் புறம். கிழக்கு நோக்கி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில் உள்ளது. கோவிலின் கிழலடி -102. மேற்கு மேல அடி 102 . தென் வட அடி-87 . வடக்கு வட அடி-87 ஆகும்    திருக்கோபுரம். திருமதில் திருச்சுற்று. திருச்சுற்றில் தாயார் ஆண்டாள் கோயில்கள்(சன்னதிகள்) ஆகியவை திகழ நடுவண் மூலவரன லெட்சுமி நாராயணர் ஸ்ரீ விமானம் அர்த்த மண்டபம்.முக மண்டபம் ஆகியவை காட்சி நல்குகின்றன.கருவறையில் ஸ்ரீ நாராயணர் தன் இடது தொடை மீது லெட்சுமி தேவியை அமர செய்த கோலத்தோடு தாம் சுகாசனராக அமர்ந்து அருள் பாலிக்கின்றார் மூலவர் முன்பு ஸ்ரீ ராஜகோபால பெருமாள் நின்ற கோலத்தில் ருக்மணி சத்யபாமா சகிதராக செப்புத் திருமேனியில் காட்சி தருகின்றனர் குழந்தை கிருஷ்ணன் ஐந்து தலை நாகம் மணவாள மாமுனிகள் செப்பு திருமேனிகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் அருள் மிகு நம்மாழ்வார்.அருள் மிகு திருமங்கையாழ்வார் . அருள் மிகு இராமானுஜர்.அருள் மிகு மணவாள மாமுனிகள். அருள் மிகு கரூடாழ்வர் ஆகியோர் உள்ளனர். மேலும் வெளியில் அனைவரும் வணங்கும் படி சின்ன திருவடி என்று அழைக்கும் அருள் மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இத் திருத்தலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.இக் கோயில் கிருஷ்ண சாமி நாயுடு வம்சாவளியை சேர்ந்தவர்கள் பரம்பரையாக நிர்வாகித்து வருகின்றனர்

தற்போது கிருஷ்ணசாமி நாயுடு வழி தோன்றலான திரு சுரேஷ் நாயுடு பரம்பரை அறங்காவலராக உள்ளார்.இவ் சிறப்பம்சம் உள்ள இத் திருக்கோயில் 58 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைப்பு பணி நடைபெற்று வருகிறது .தற்போது கோவில் நிர்வாகத்தை திரு எஸ் சுரேஷ் கவனித்து வருகிறார் இவருடன் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் (சந்தான ராமசுவாமி திருக்கோயில்) இனைந்து பார்த்து வருகின்றனர் அனைவரும் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான இத்திருத்தலம் வந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளை தரிசித்து இறைவன் அருள் பெற வேண்டுகிறோம்

முக்கிய அறிவிப்பு  கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இறைவன் அருள் பெற வேண்டுகிறோம்
கோவில் பரம்பரை அறங்காவலர் முகவரி- -எஸ். சுரேஷ் நாயுடு பரம்பரை அறங்காவலர் அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் நீடாமங்கலம் 9445742401  9003642401   செயல் அலுவலர்   சந்தான ராமசாமி கோவில் நீடாமங்கலம்  எங்கள் கோவில் இரண்டு வருடமாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறதுதாங்கள் நமது கோவிலுக்கு வருகை தந்து புணரமைப்பு பணிகளை பார்வையிட வேண்டுகிறேன்.

Related Articles

Back to top button
Close
Close