fbpx
Others

திருவாரூர்—நீடாமங்கலம் கிரீன் நீடா விழா—-பிப்.20-செய்தி

இயற்கை சமநிலையில் இருந்தால்தான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் கிரீன் நீடா விழாவில் வலியுறுத்தல்….
நீடாமங்கலம் பிப்.20
ஊரக வேளாண் அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் 25 பேர்கள் நீடாமங்கலத்தில் தங்கியிருந்து 75 நாட்கள் பயிற்சி பெற்றனர். இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக 5 நாள் பயிற்ச்சிக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் குறுங்காடுகள் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி பெற்றனர். நிறைவு நாள் விழா நீடாமங்கலம் பாலாஜி நகரில் உள்ள கிரீன் நீடா குறுங்காட்டில் கிரீன் நீடா திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் க.முகம்மது ரஃபீக், இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், சுற்றுச்சூழல் காப்பதிலும், மேம்பாடு அடைவதிலும் வேளாண் கல்லூரி மாணவிகளின் பங்கு மகத்தானது. தமிழகத்தின் வனப்பரப்பு 33 சதவீதமாக உயர்த்திட அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேளாண் கல்லூரி மாணவிகள் முன்வர வேண்டும். நீங்கள் வேளாண்மை குறித்து பாடமாக படித்ததை மக்களுக்கு விளக்கி இயற்கையை காக்க வேண்டும். இயற்கை சமநிலையில் இருந்தால்தான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்றார். திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி கீர்த்தனா வரவேற்றார். ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவி தீபிகா நன்றி கூறினார்

Related Articles

Back to top button
Close
Close