fbpx
Others

திருவாரூர் அருகே கிரீன் நீடா 22ஆவது குறுங்காடு துவக்கம்….

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,
பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சிறு புலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோயில் வளாகத்தில் கிரின் நீடா 22ஆவது குறுங்காடு தொடங்கப்பட்டது. இக்குறுங்காட்டில் இலுப்பை, மகோகனி , நெல்லி, மா , தேக்கு மற்றும் பூச்செடிகள் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  விழாவிற்கு சிறுபுலியூர் குறுங்காடு அமைப்பாளர் இளையாழ்வார் தலைமை வகித்தார்.
பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வெற்றிச்செல்வம் ,திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே. ஜானகிராமன் , மன்னை இராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிரீன் நீடா சுற்று குழல் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.இராஜவேலு இலுப்பை மரக்கன்றினை நட்டு குறுங்காட்டை தொடங்கி வைத்து பேசுகையில், உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து அனைவரிடமும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, அது சமூக வலைத்தளங்களில் மட்டுமே உயிரோட்டமாக இருக்கிறது. மரம் நடுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்றவற்றிலும் ஏற்பட வேண்டும், நம் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த மாணவர்கள் பங்களிப்பு முக்கியமானது. 2019 ம் ஆண்டு கிரீன் நீடா அமைப்பு முதல் குறுங்காட்டை தொடங்கினோம். இன்று அங்கு நட்ட மரங்களில் பழங்கள் பழுக்க தொடங்கியுள்ளது. பறவை வாழ பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது 33 சதவீத வனப்பரப்பு உயர் நாம் அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார்.அகரமேடு ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.சிறுபுலியூர் ஸ்ரீநிவாசாரி நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close