fbpx
Others

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம்

கொள்ளுமேடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை மையம் செயல் பாட்டால் பயமின்றி பிரசவம்!  தாய்மார்கள் பாராட்டு!!

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி கொள்ளு மேடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மார்களின் பிரசவ சிரமத்தை போக்குவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
இதன் மூலமாக 34 தாய்மார்களுக்கு பிரசவமும் 166 தாய்மார்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் இப்பகுதி தாய்மார்கள் பயமின்றி குழந்தை பெறுவதற்கும் மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி தாய்மார்களை அழைத்துச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது இதனால் தாய்மார்கள் வேதனை அடைந்தனர். கொள்ளு மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டதால் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் பிரசவம் பார்த்துக் கொள்வதோடு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.( 2 ( 2 ) கடந்த 2022 ஏப்ரல் மாதம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம் வில்லிவாக்கம் வட்டாரம் சார்பில் மதுரவாயல் வானகரத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார முதன்மை மருத்துவர். டாக்டர். லாவண்யா மற்றும் மருத்துவக் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர் . இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியம். பால்வளத்துறை அமைச்சர் சா. மு.நாசர். டி .ஆர். பாலு எம்.பி .சுகாதார முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன். சுகாதார இயக்குனர் செல்வ விநாயகம். மாவட்ட ஆட்சியர். ஆல் பி ஜான் வர்கீஸ் காரப்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பயனாளிகள் பரிசோதனை சிகிச்சையும் பெற்று மருந்து மாத்திரைகளை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close