fbpx
Others

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சி—சிறப்பு செய்தி

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சிக்குட்பட்ட ஆரூண் உல்லாச நகர், பாலாஜி கார்டன், ஜெயச்சந்திரா நகர் பகுதிகளில் புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, வேதநாயகி ஆகியோர் ஆலோசனையின் பேரில் புள்ளிலைன் ஊராட்சி செயலர் பொன்னையன் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் இப்பகுதிகளில் மழைநீர் தேங்காதவண்ணம் ஜே.சி.பி கொண்டு மழை நீர் சீராக செல்வதற்கு வழி ஏற்படுத்தினர்.தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் டிராக்டர், பம்ப் மோட்டார் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாலைசேதமடைந்து குண்டு குழியான பகுதிகளில் ரப்பீஸ் கொட்டப்பட்டு சீராக்கப்பட்டது. ஆங்காங்கே தேங்கியுள்ள நீர் வெளியேறுவதற்காக அடைப்பில் இருந்த குப்பைகளும் அகற்றப்பட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close