fbpx
Others

திருவள்ளூர்மாவட்டம்நாரவாரிகுப்பம்பேரூராட்சிகவனிப்பார்களா..?

  

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம்நாரவாரிகுப்பம்பேரூராட்சி பகுதியில் சோத்துப்பாக்கம் சாலை தீயணைப்பு நிலையம் அருகில் உழவர் சந்தை2010ல் உருவாக்கப்பட்டது.
இதில் சுமார் 24 கடைகள் மற்றும் காய்கறிகள் கீரைகளை வைப்பதற்கான பகுதிஅலுவலகம் ஆகியவை உள்ளன.2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த உழவர் சந்தை கடைகளில் சரியான முறையிலே விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டுவந்து விற்பதற்கோ அல்லது வணிகம் செய்வதற்கோ இயலாத நிலைமை உள்ளது. கிராமப்புறங்களில் இருந்து வருகின்ற காய்கறி வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் உழவர் சந்தைநாரவாரி  குப்பம் பேரூராட்சியில் இருப்பது பலருக்கு தெரியாத நிலைமை உள்ளது.
செங்குன்றம் பஜார் பகுதியில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் காய்கறிகள் கீரைகள் பழங்கள் போன்றவற்றை கொண்டு வந்து சாலை ஓரங்களில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு காய்கறி .கீரை. பழங்கள் விற்பனை செய்யும் விவசாயிகளை வியாபாரிகளை உழவர் சந்தையில் வைத்து விற்கச் சொன்னால் நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்கும் வருமானம்.வியாபாரிகளுக்கும் விற்பதற்கு ஒரு தகுதியான இடமாக இது அமையும்.போக்குவரத்து நெரிசலும் பெரும் அளவில் குறையும்..ஆகவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியும்குறிப்பாக செங்குன்றம் காவல் மாவட்ட போக்குவரத்து காவல்துறையும் இதை கவனித்து உழவர் சந்தையிலே கிராமப்புறங்களில் இருந்து வருகின்ற காய்கறிகள்.
கீரைகள்.பழங்கள் போன்றவற்றை விற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விரைவில் கவனிப்பார்களா…???

Related Articles

Back to top button
Close
Close