fbpx
Others

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!

``கொண்டாடி கொண்டே இருப்போம்" - திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரிகடல்நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே 37 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டுபாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டாம் நாளான இன்று திருவள்ளுவர் காட்சி கூடத்தை திறந்து வைத்தார்.திருவள்ளுவர் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முக்கடல் சூழும் குமரிமுனையில் முப்பால் புலவர் வள்ளுவருக்கு,முத்தமிழறிஞர்வைத்தசிலையினைபோற்றகூடியவகையில்வெள்ளிவிழா  வினை திராவிட ஆட்சியில் நான் நடத்திவைப்பதில் நான் பெருமையடைகிறேன், பூரிப்படைகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் என் வாழ்நாளின் சிறந்த நாளாகா தமிழின் பெருமையை, குறளின் பெருமையை இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்லும் கடமை நிறைவேற்றியதாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிலையை திறந்து வைக்கும் நேரத்தில் பெத்தானை அழுத்தக்கூடிய கலைஞர், தன் உடல்நடுங்குவதாக சொன்னார். அந்த அளவுக்கு அவர் உணர்ச்சிப்பெருக்கில் இருந்தார். வான்புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்பது அவரின் நெடுங்கனவு.அந்த கனவு நனவாகும் மகிழ்ச்சியால் அவருக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. இன்று இந்த சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ``கொண்டாடி கொண்டே இருப்போம்" - திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!கலந்துகொள்ளுவது எனக்கும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பை உருவாக்கி தந்துவிட்டு போயிருக்கிறார் என்பதுதான் அந்த பெருமைக்கு காரணம். பொதுவாக குடும்பங்களில் உங்கள் அப்பாஎன்னவைத்துவிட்டுபோனார்எனசாதாரணமாககேட்பார்கள்.என்னைக்கேட்டால் தமிழ்நாடு தொடங்குகின்ற இந்த குமரிமுனையில் வள்ளுவர் சிலையில் தொடங்கி கலைஞர்செய்தசாதனைகளைசொல்லிக்கொண்டேபோகலாம்.இதெல்லாம்தனிப்பட்டஸ்டாலினுக்காகசெய்தாரா.அப்படியென்றால்யாருக்காகசெய்தார்.தமிழ்நாட்டுக்கும்தமிழுக்கும்,தமிழகத்துக்கும் அவர் உருவாக்கித்தந்த சொத்துகள் இதெல்லாம். என்னைப்பொறுத்தவரையில் அறவழியில் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைக்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு.திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னதும் அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என நான் சொன்னேன். சிலை அமைத்ததற்கு எதற்காக விழா நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது உள்ளர்த்தம் இருக்கிறது. அவர்களுக்கு பதிலுக்கு பதில் சொல்லுவது தேவையில்லை. ஆனால், நான் உங்ளுக்கு சொல்லிக்கொள்வது. திருவள்ளுவர் தமிழர்களுக்கு மிகப்பெரிய உலக அடையாளம், திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம்.``கொண்டாடி கொண்டே இருப்போம்" - திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்! கொண்டாடுவோம், கொண்டாடிக்கொண்டே இருப்போம்.இன்று நடைபெறுவதுஐம்பெரும்விழா. ஐயன் திருவள்ளூவர் சிலை வெள்ளிவிழா, திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் சிலையையும் இணைக்கின்ற கண்ணாடி இழை பாலம் திறப்புவிழா,வெள்ளிவிழாமலர்வெளியீடு,திருக்குறள்கண்காட்சி,  ஐயன்திருவள்ளுவர்தோரணவாயில்அடிக்கல்நாட்டுவிழா. நேற்று திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு பாறையையும் இணைக்ககூடிய 37 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தை திறந்துவைத்தேன். இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடுசெய்த அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Articles

Back to top button
Close
Close