திருவண்ணாமலை–மீதுஏறி சென்று தீப தரிசனம் காணஅனுமதிஉண்டா….?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக
வருகிற 3-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ளஅண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். வழக்கமாக மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியின் போது அண்ணாமலையார் மலை மீதுஏறி சென்று தீப தரிசனம் காண சுமார் 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு பெஞ்ஜல்புயல்காரணமாகபெய்தகனமழையினால்அண்ணாமலையார் மலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரே வீட்டில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பல தெருக்களில் மண் சரிவினால் மண்ணும், கற்களும் அடைத்து பெரும் சேதம்ஏற்பட்டது. அப்போதுபுவியியல்மற்றும்சுரங்கங்கள்துறையினர்மூலம்ஆய்வுசெய்துமலையின்உறுதித்தன்மைபாதிக்கப்பட்டுள்ளதாகஅறிக்கை அளித்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு மகா தீபம் காட்சிஅளிக்கும்11நாட்களும்மலைஏறமாவட்டநிர்வாகத்தின்மூலம்தடைவிதிக்கப்பட்டது.இந்தஆண்டிற்கான மகா தீபம் வருகிற 3-ந் தேதி ஏற்றப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வுகள் நடத்திவருகிறது. மேலும் மழை பொழிவை பொருத்தும், மலையில் உள்ள மண்ணின் உறுதி தன்மையை பொருத்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு இந்த ஆண்டு மகா தீபத்தரிசனத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கலாமா, இல்லையா என்பது குறித்து மகா தீபத்தையொட்டி தெரிவிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் வருகிற 30-ந்தேதி கன மழை பெய்யும் என்று வானிலைஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் மகா தீபத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வரை மழை பெரிய அளவில் பெய்யாததால் இந்த ஆண்டு மகா தீபத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி உண்டா, இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.