திருவண்ணாமலை–மத்திய கூட்டுறவுவங்கி மேலாளர் விஜயலட்சுமி கைது…
திருவண்ணாமலை காந்திநகரில் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளை செயல்படுகிறது. இங்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டுவைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை வங்கியில் வைத்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக வங்கியில் 20 பேர் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.3 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ளனர். இதில் வங்கி பெண் மேலாளர் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.தங்க நகைகளின் மதிப்பு ஒரு சவரன் 75000 என்கிற அளவிற்கு போய்விட்டது. தங்க நகைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதால் பலரும் நகைகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார்கள். ஆனால் அப்படி நகைகளை அடகு வைக்க வரும் சிலர் மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள். வங்கி ஊழியர்கள் சிலரும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். இதே போன்ற சம்பவங்கள் மன்னார்குடி, தேனி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இப்போது நடந்துள்ளதாக புகார்கள் எழுந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில்
திருவண்ணாமலையும்இணைந்துள்ளது.திருவண்ணாமலை மாநகரம் காந்திநகரில் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளை ஒன்று செயல்படுகிறது. இங்கு மங்கலம் அடுத்த கருமாரபட்டி கிராமத்தைச்சேர்ந்தராமதாஸ்என்பவரும்,திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை வங்கியில் வைத்துபணம்பெற்றதாகபுகார்கள்எழுந்தது.இதனைத்தொடர்ந்து ராமதாஸ், ஏழுமலை ஆகிய இருவரிடமும் வங்கியில் உள்ள மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் ரகசியமாக பேசி இவர்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டோர்கவரிங்நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் ரூ.3 கோடி ரூபாய் அளவில் பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியின் தணிக்கை பிரிவு அதிகாரிகள் காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் நகைகளை ஆய்வு செய்துள்ளார்கள். அப்போது ராமதாஸ் மற்றும் ஏழுமலை உள்பட 22 பேர் பெயரில் கவரிங் நகைகளை வைத்து ரூ.3 கோடி அளவில் மோசடி செய்துள்ளதும், இதற்கு உடந்தையாக வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் வங்கி பணியாளர்கள் உடந்தையாக இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள்,திருவண்ணாமலைமாவட்டபொருளாதாரகுற்றப்பிரிவுக்கு இந்த மோசடி தொடர்பாக புகார் அளித்தனர். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டதை விசாரணைக்கு பின்னர் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், ஏஜெண்டாகசெயல்பட்டஏழுமலைஆகிய3பேரைபொருளாதாரகுற்றப்பிரிவுபோலீசார்கைதுசெய்தனர்.இந்தசம்பவம்திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.