திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா—அமைச்சர்ஆய்வு…..
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார்
நிறுத்தங்களில் பக்தர்களுக்காக குடிநீர், மின் விளக்குகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்மேலும் மாநகராட்சிசார்பாககிரிவலப்பாதை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள் மற்றும்நெடுஞ்சாலைத்துறைசார்பாகஅமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துகுடிநிர்குழாய்கள்முறையாகஇயங்குகிறதா, நீர் ஏற்றும்இயந்திரங்கள்முறையாகஇயங்குகின்றனவாஎன்பதுகுறித்துதுறைசார்ந்தஅலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பாக திருக்கோவில்வளாகம்,மாடவீதி,மற்றும்கிரிவலபாதையில்ஆம்புலன்ஸ்வசதியுடன்மருத்துவகுழுக்களின்அமைவிடங்கள்குறித்தும்துறைசார்ந்தஅலுவலர்களிடம்கேட்டறிந்தார்கள்.இந்தஆய்வின்போதுபொதுப்பணிகள்,நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது :-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021 சட்டமன்ற தேர்தலின் போது அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தேரோடும் வீதியை சிமெண்ட் கான்கிரீட் சாலையாக அமைக்கப்படும் என தெரிவித்தார்கள் அதன்படி அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள். நேற்றைய தினம் மாடவீதியில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சாலையில் எவ்வித சிரமமின்றி திருத்தேர் ஓடியது, தேரோடும் விதியை விரிவுபடுத்தி தராமான வகையில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது என ஆன்மிக பெருமக்கள் பலரும் பாராட்டிவருகின்றனர். திருக்கார்த்திகைதீபத்திருவிழாநாளன்றுபக்தர்கள்வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பிரத்தியேக ஆன்ட்ராய்டு செயலி நிறுவப்பட்டுள்ளது. இந்த செயலியில் பக்தர்கள் எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக பொது தகவல்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள், மருத்துவ முகாம்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்,காவல் சேவை மையங்கள், கழிவறைகள், அவசர உதவி 108ஆம்புலன்ஸ், அவசர மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை
இருக்குமிடங்கள் குறித்தும், அவசர தேவைக்கான கட்டுபாட்டு உதவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், திருக்கோயில் பற்றிய விவரங்கள் ஆகியவைகளைஇந்தசெயலில்அறிந்துகொள்ளலாம்.திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே வருகை தருகின்ற பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவருவாய்த்துறை,ஊரகவளர்ச்சித்துறை,மாநகராட்சிஆகியதுறைகள்மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்தலைமையில்ஒருங்கிணைக்கப்பட்டுஅனைத்துஅடிப்படைவசதிகளும்சிறப்பாகஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 கார் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துறை சார்பாக 4764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன.கடந்தஆண்டைவிடகூடுதலாக20%பேருந்துநடைகள்இயக்கப்படுகின்றன), தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் ஏற்படும் நேரத்தில் 40 ஸ்பேர் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, தீப நாளன்று பக்தர்கள் தற்காலிகபேருந்துநிலையம்,கார்நிறுத்தங்கள்மற்றும்கிரிவலப்பாதைஇடையேபயணிக்கஎதுவாககட்டணமில்லாமல்220தனியார்,பள்ளிகல்லூரிபேருந்துகள்24/7நேரமும்போதியஅளவில்இயக்கநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் ரூ.10/- குறைந்த பட்ச கட்டணத்தில் 200 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் தீப நாளன்று இயக்கப்பட உள்ளன. அதற்கேற்ப தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்துமிடங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்குகள்,கழிவறை,காவல்துறைபாதுகாப்புமையங்கள்,உதவிமையங்கள்,பக்தர்கள்அறிந்துகொள்ளும்வகையில்தகவல்பலகைகள்,உள்ளிட்டஅடிப்படைபணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீபத்திருவிழாசிறப்பாகநடைபெறஅனைத்துதுறைபணிகளையும்ஒருங்கிணைக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகதுணைஆட்சியர்தலைமையில்குழுஅமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் திறம்பட. மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மாநகராட்சி சார்பாக 51 இடங்களில் குடிநீர்வசதிகளும்,நெடுஞ்சாலைத்துறைசார்பாக14இடங்களில்சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.38 இடங்களில் கழிப்பிட வசதிகள், 720 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பாக திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவர்களுடன் 7 மருத்துவ குழுக்களும், மாடவீதி, மற்றும் கிரிவல பாதையில் 90 மருத்துவ குழுக்களும் நிறுவப்பட உள்ளது. 45 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்களும், 5 பைக் ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக போதிய அளவிலான காவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர், திருக்கோயில் வளாகம், மாடவீதி மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 இடங்களில் காவலர் கண்காணிப்பு கோபுரங்கள், 61 இடங்களில் உதவி மையங்கள், 454 இடங்களில் பொது அறிவிப்புஅமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தையும்பொதுமக்கள்அறிந்துகொள்ளகார்த்திகைதீபம்செயலியைபக்தர்கள்பயன்படுத்திக்கொள்ள பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.