திருவண்ணாமலையில் C.M ஸ்டாலின் 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி..
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, தற்போது நடந்து வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, புதிய
திட்டங்களுக்குஅடிக்கல்நாட்டிவருகிறார்.அதுமட்டுமல்லாமல் மாவட்டத்திற்கு தேவையான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், நேற்றிரவு திருவண்ணாமலை மாவட்டம் வந்தார். திருவண்ணாமலையில் புதிதாகதிறக்கப்பட்டுள்ளபூங்காவில்நடைபயிற்சிமேற்கொண்டு பார்வையிட்டார். ஸ்டாலினின் திடீர் வரிகையால் பூங்காவில் இருந்த பலரும் உற்சாகம் அடைந்தனர். அப்போது சிலருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து இன்றும் திருவண்ணாமலையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள மைதானத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். பின்னர், மலப்பாம்பட்டியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஸ்டாலின்ரூ.2,095 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்க உள்ளார். அதேபோல் 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2.66 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவுகளை வழங்க உள்ளார்.இதனால்திருவண்ணாமலையில்பலத்தபாதுகாப்புஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என்று புதிய அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலின் திருவண்ணாமலை வந்திருந்தார். தற்போது டிசம்பர் மாதத்திலேயே 2வது முறையாக ஸ்டாலின் திருவண்ணாமலை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.