fbpx
Others

திருமாவளவன்—அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் …..?

அம்பேத்கரின் பிறந்த நாளின் போது கும்பகோணத்தில், அம்பேத்கருக்கு காவி உடை
திருநீறு மற்றும் குங்குமம் பொட்டு வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை
ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அம்பேத்கருக்கு காவி திருநீறு குங்குமம் இட்டு அவமதிப்பதாக குற்றம்சாட்டி சனாதன சங்பரிவார் கும்பலை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது மேடையில் பேசிய திருமாவளவன், கொள்கை முரண் உள்ளவர்கள் அம்பேத்கருக்கு ஏன் மாலை போட வேண்டும். யார் நீ? உனக்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்மந்தம்? என கேள்வி எழுப்பினார்.அம்பேத்கருக்கு காவி உடை, திருநீறு, குங்குமம் பொட்டு போடுவதை எப்படி பொறுத்து கொள்ள சகித்து கொள்ள முடியும். இது வரலாற்று திரிபு இல்லையா ? இதை எப்படிவேடிக்கை பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து தப்பித்து கொண்ட கோழைசார்வர்கரை வீர சாவர்க்கர் என ஆர் எஸ் எஸ் சொல்வதாக விமர்சித்த அவர்,நூறு இருநூறு கொடுத்தால் அம்பேத்கர் படத்தோடு சாவர்க்கர் படத்தையும்அச்சடித்து ஓட்டுகிறார்கள் கை கூலிகள் என சாடினார்.முதலில் திருவள்ளுவர் பெரியார் மற்றும் அண்ணாவுக்கு காவி சாயம் பூசினார்கள்
இப்போது அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து, திருநீறு, குங்குமம் போட்டு
வைத்து போஸ்டர் ஓட்டுகிறார்கள். இது சாதாரணமாக கடந்து செல்ல கூடிய விஷயம் அல்ல என திருமாவளவன் கூறினார்.அல்லாவுக்கு யாராவது உருவம் வரைந்தால் இஸ்லாமியர்கள் அவரை உயிரோடுவிடமாட்டார்கள் அழித்தொழித்து விடுவார்கள் என தெரிவித்தார். அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயற்சி செய்தால், விசிகவின் பாதை, செயல்பாடுகள்வேறாக இருக்கும் என திருமாவளவன் எச்சரித்தார்.

 

 

Related Articles

Back to top button
Close
Close