fbpx
Others

 திருப்பூர்–ரூ.24ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை ….!

 திருப்பூர் மாவட்ட வளர்ச்சி பணிக்கு வரும் நிதியாண்டுக்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.24 ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. நபார்டு வங்கி திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிதியாண்டு தொடங்குவதற்கு முன் உத்தேச கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்படி அடிப்படையில் இறுதி கடன் அறிக்கையை வங்கிகள் வெளியிடும். வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் வருகிற 2023-24-ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்ட வங்கிகளுக்கான வருடாந்திர கடன் திறன் ரூ.24 ஆயிரத்து 790 கோடி எனரூ.24ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 63.43 சதவீதம் அதிகம். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் முன்னிலையில் நபார்டு வங்கியின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. கலெக்டர் வினீத் வெளியிட, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் பெற்றுக்கொண்டார். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ரூ.24 ஆயிரத்து 790 கோடி கடன் திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.24 ஆயிரத்து 790 கோடி மதிப்பில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.8 ஆயிரத்து 815 கோடியே 31 லட்சமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.13 ஆயிரத்து 417 கோடியே 21 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி கடன் வழங்க ரூ.682½ கோடியும், கல்விக்கடன் வழங்க ரூ.328 கோடியே 95 லட்சமும், வீட்டுவசதிக்கு ரூ.357¾ கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.435 கோடியே 7 லட்சமும், மகளிர் குழுவினர் உள்ளிட்ட மற்ற துறையினருக்கு ரூ.708 கோடியே 19 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.45 கோடியே 9 லட்சம் என மொத்தம் ரூ.24 ஆயிரத்து 790 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close