திருப்பூர்–கூலி தொழிலாளர்கள் காவல்துறை தலைவரை புகார்மனு….

கோவை., மே. 28 :
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் மற்றும் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் மதியரசன் இவர்கள் இருவரும் கோவையில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கோவை பந்தயசாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, கடந்த 23 ஆம் தேதி உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது தோட்டத்தில் வேலைக்காக சென்றோம், அங்கிருந்த சிமெண்ட் குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டிருந்ததை சீரமைக்க முற்பட்ட பொழுது, பக்கத்து தோட்டத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர் தண்ணீர் குழாயை ஏன் உடைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், அந்த பணிகளை உடனடியாக நிறுத்த கூறினார். அதனை தொடர்ந்து நாங்கள் அந்த பணிகளை செய்யாமல் திரும்பி வந்துவிட்டோம். இருப்பினும் முருகேஷ் எங்களை வீடியோ எடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி நாங்கள் நடந்ததை கூறினோம். பின்னர் காவல்துறையினர் சமாதானமாக இருவரும் செல்லுமாறு கூறியதை தொடர்ந்து நாங்கள் வந்துவிட்டோம். ஆனாலும் தொடர்ந்து முருகேஷ் எங்களை மிரட்டி வருகிறார், வாழ்நாள் முழுவதும் உங்களை சிறையில் தள்ளி விடுவேன் என்று கூறுகிறார். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்