fbpx
Others

திருப்பூர்–ஆட்டோவில் வைத்தே பிரசவம் பார்த்த பெண்போலீஸ்..

Way2News Tamil திருப்பூர்: கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ் சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் 15-வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  ரிங் ரோடு பகுதியில் நேற்று இரவு 11.30மணியளவில்போலீசார்வாகனசோதனையில்ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவில் பெண் கதறி அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார்ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்ற இளம்பெண் பிரசவ வலியால் துடித்ததும்,அவரது கணவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் தெரியவந்தது.அப்போது, பணியில் இருந்த பெண் போலீஸ் கோகிலா கர்ப்பிணி பாரதிக்கு ஆட்டோவில்வைத்தேபிரசவம்பார்த்துள்ளார்.போலீஸ் பணியில் சேர்வதற்குமுன் நர்சிங் படித்து மருத்துவமனையில் பணியாற்றிய கோகிலாஅந்த அனுபவத்தை வைத்து பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் வடமாநில பெண் கோகிலாவுக்கு பெண் குழந்தை பிறந்ததுஇதையடுத்து, பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.இருவருக்கும்மருத்துவமனையில்சிகிச்சைஅளிக்கப்பட்ட நிலையில் தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய், சேயின் உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் கோகிலாவுக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர்போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close