திருநின்றவூர் — மாநில அளவிலான சிலம்பப் போட்டி ..!


திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது ! கல்லுரிகுழும தலைவர். கனகராஜ் தொடங்கி வைத்தார்!! தமிழ்நாடு சிலம்பம் கமிட்டியில் இணைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் நடந்தது.
மாநிலத் தலைவர். பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார்.செயலாளர். அர்ஜுன், பொருளாளர். சிவ முருகன், முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர். டாக்டர். வழக்கறிஞர்.எஸ். ராஜா வரவேற்றார்.சிலம்ப போட்டியை ஜெயா கல்வி குழும தலைவர். அ. கனகராஜ், மற்றும் ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார் தொடங்கி வைத்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய தொழில்நுட்ப இயக்குனர். பாக்யராஜ்,தேசிய துணை தலைவர். அருள் வாக்கு.
எம். ராஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர். சிவக்குமார் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.மாவட்ட செயலாளர். ஜெ.ரஜினி, பொருளாளர்.எம். பாஸ்கர் நன்றி கூறினர்.