fbpx
Others

திருட பிளான் போட்டு கொடுத்த போலீஸ்….? பொது மக்கள் அதிர்ச்சி…..!

பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (35). இவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.மேலும் அவரின் மனைவி அந்த பகுதியில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். அந்த மளிகை கடை அருகே சந்தேகப்படும் படி சிலர் வந்து செல்வதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்களில் ஒருவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த செந்தில்குமார் (30), இவரை கடந்த 2021-ம் ஆண்டு பெருந்துறை பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.பின்னர் வழக்கு விசாரணைக்கு அவரை பெருந்துறை கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது பாதுகாப்பிற்காக மேற்படி ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ்காந்தி சென்றுள்ளார். அப்போது, அவர் செந்தில்குமாரிடம், போலீசாரிடம் சிக்காமல் திருட்டுகளை நடத்துவது எப்படி? என்பதை நான் சொல்லித் தருகிறேன். நீ என்னை வந்து பார் எனக் கூறியுள்ளார்.  அதன்படி கடந்த ஆண்டு, சிறை தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் ராஜீவ்காந்தியை, பெருந்துறையில் உள்ள அவரது மளிகைகடையில் வைத்து சந்தித்துள்ளார். அப்போது செந்தில்குமாருடன். மதுரை மேலூரை சேர்ந்த கருப்புசாமி (31), பால சுப்பிரமணி (42)ஆகியோரும் சென்றுள்ளனர்.அவர்கள் 3 பேரிடமும் ராஜீவ்காந்தி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வீடுகள் பற்றியும், அதிகம் போலீஸ் ரோந்து இல்லாத இடங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். அவரது ஆலோசனையின் படி பெருந்துறை, சித்தோடு உள்ளிட்ட இடங்களில் 3 பேரும் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கு தங்களுக்கு மூளையாக இருந்து, திருட்டுகளை எந்தெந்த இடத்தில் எப்படி நடத் துவது? என்று, தங்களுக்குச் கொடுத்ததே போலீஸ்காரர் ராஜீவ்காந்தி தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி, செந்தில்குமார், கருப்புசாமி, பாலசுப்பிரமணி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close