fbpx
Others

திருச்சி மாநகரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

பண்டிகை மற்றும் விழா காலங்களில் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காவல் துறை சார்பில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மன்னார்புரம் அணுகுசாலை, இலுப்பூர் சாலை மற்றும் வில்லியம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் செயல்படக்கூடிய தற்காலிக பேருந்து நிலையங்களை மாநகர காவல் ஆணையர் என்.காமினி நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜன.17-ம் தேதி வரை செயல்படவுள்ள இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். விபத்துகளைத் தடுக்க பேருந்து ஓட்டுநர்கள் முறையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகரில் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும். வியாபாரிகள் சாலையை ஆக்கிமிரத்து வியாபாரம்செய்யக்கூடாது. வில்லியம்ஸ் சாலையில் சோனா-மீனா திரையரங்கு எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வழித்தட பேருந்துகளும், இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை வழித்தட பேருந்துகளும், மன்னார்புரம் அணுகுசாலை தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை வழித்தட பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close