திமுக தலைமை தவாகவேல்முருகனிடம் டீல் பேசி வருகிறார்கள்….
திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே, “இரட்டை இலக்கத்தில் சீட் கேட்போம்” என சம்பிரதாயச் சடங்காகச் சொல்லி வருகின்றன. அந்த லிஸ்ட்டில் தவாக வேல்முருகனும் தங்களுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என பட்டியல் கொடுத்திருப்பதாச் சொல்கிறார்கள் அவரது கட்சியினர்.இதனிடையே, வேல்முருகனின் வேண்டுகோளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நெய்வேலி தொகுதியின் சிட்டிங் திமுக எம்எல்ஏ-வான சபா.ராஜேந்திரனும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகி வருகிறார்.இது தொடர்பாக வேல்முருகனிடம் கேட்டதற்கு, “எங்கள் கட்சி மாநில அளவில் வளர்ச்சி கண்டிருப்பதால் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். குறிப்பாக, தருமபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் சில தொகுதிகளையும் நெய்வேலி தொகுதியையும் குறிப்பிட்டுக் கேட்டிருக்கிறோம்” என்றார்பாமக-வில் வளர்ந்த வேல்முருகன், தற்போது பாமக ரெண்டு பட்டுக் கிடப்பதால் அந்தக் கட்சி வலுவாக இருக்கும் தருமபுரி, சேலம்மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதன் மூலம் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி பாமக வேட்பாளர்களை வீழ்த்த வியூகம் வகுப்பதாகச் சொல்லப்படுகிறது.ஆனால், விரும்பும் தொகுதி என்றால் ஒரு தொகுதி தாங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இரண்டு தொகுதிகள் என திமுக தலைமை டீல் பேசி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் சொல்கிறார்கள்.