திடீரென டோனை மாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர்….?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக உள்ள மோகன் பகவத் (RSS chief Mohan Bhagwat) இன்னும் ஆறு நாட்களில் 75 வயதை எட்ட உள்ளார். இந்த நிலையில், 75 வயது ஆனால் நான் ஓய்வு பெற்றுவிடுவேன் என்றோ, மற்றவர்களும் 75 வயது ஆனால் ஒதுங்கி கொள்ள வேண்டும் என்றோ நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் மோகன் பகவத் விளக்கம் அளித்துள்ளார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.மத்தியில்ஆளும்கட்சியாகஉள்ளபாஜகவில்75வயதுஎட்டிவிட்டால்எந்தஒரு பதவியிலும்இருக்கஅனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறை சமீப காலகட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தொடங்கி எடியூரப்பா வரைக்கும் பல முக்கிய தலைவர்களுக்கும் இதை காரணம் காட்டியே பதவியில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர்.இந்த நிலையில், தான் பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த நாள் வருகிறது. இது அவருக்கு 75வது பிறந்த நாளாகும். பாஜகவில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையை பின்பற்றி பிரதமர் மோடியும் ஓய்வு பெறுவாரா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்தது. இந்த பேச்சுகளுக்கு தூபம் போடும் விதமாக பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அமைந்தது.மோகன் பகவத் பேசுகையில், “75 வயது ஆகிவிட்டது என்றால் நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று பேசியிருந்தார். மோகன் பகவத்தின் பேச்சு, பாஜக வட்டாரத்திலும் பேசுபொருளானது. கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றி மோடியும் 75 வயதுடன் ஒதுங்கி கொள்வாரா என்று பாஜக வட்டாரத்தில் பல்வேறு யூகங்களும் எழுந்தன.இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை” என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்வுகளின் ஒரு நிகழ்வாக இன்று செய்தியாளர் சந்திப்பில் மோகன் பகவத் பங்கேற்றார். இதில் பேசிய மோகன் பகவத் கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதற்கு துணை அமைப்புகள் எதுவும் கிடையாது. பாஜகவிற்காக ஆர்.எஸ்.எஸ் முடிவு எடுக்கிறது என்று சொல்வதில் உண்மையில்லை. அனைத்து முடிவுகளும் கூட்டாகவே எடுக்கப்படுகிறது. 75 வயதில் ஒருவர் ஓய்வு பெற வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே நான் செய்வேன்.சங்க் அமைப்பில் நாங்கள் ஸ்வயம்சேவகர்களாக இருக்கிறோம். நாங்கள் விரும்பினமோ இல்லையோ.. எங்களுக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 80 வயது ஆனாலும் கூட நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வழிநடத்துவேன். குடும்ப நபர் ஆர்.எஸ்.எஸ் தலைவராக வருவதற்கு எந்த தடையும் கிடையாது. ஆனால், அந்த நபர் தனது முழுநேரத்தையும் ஆர்.எஸ்.எஸ்-க்காக அர்ப்பணிக்க வேண்டும்.