fbpx
Others

தாளவாடி அருகே நள்ளிரவில் கார் விபத்து —இருவர்உயிரழப்பு.

 ஈரோடுமாவட்டம்தளவாடியில் இருந்துசத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் அருகே நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் சம்பவஇடத்திலேயே உயிரழப்பு. மைசூரை சேர்ந்த ஐந்து நபர்கள் கோழிப்பாளையம் திருமண விழாவிற்கு வந்துள்ளனர். தேநீர் அருந்த புளிஞ்சூர் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மூன்று நபர்களை ஸ்பீடு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்த இரண்டு நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாம்ராஜ்நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close