fbpx
Others

தாம்பரம்வட்டார போக்குவரத்து அலுவலகம்-ஆய்வு- பரபரப்பு.?

மாதிரி படம்
  •  தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா செல்லும் வழியில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி இந்த அலுவலகத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டு வடிவிலான 43 ஆர்.சி., புத்தகங்கள் காணாமல் போயுள்ளன. ஆர்டிஓ அலுவலக ஊழியர்கள் அதிகாரிகள் அலுவலகம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ஆர்.சி.,புத்தகங்கள் காணாமல் போனது உறுதியானதை தொடர்ந்து போக்குவரத்து உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றதால் விவகாரம் பெரிதானது.தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெயசங்கரன் கடந்த 12ம் தேதி தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். ஆர்.சி புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அலுவலக கண்காணிப்பாளர்களான பாலாஜி மற்றும் காளத்தி ஆகியோரிடம் தனியாக விசாரணை நடத்தினார். காணாமல்போன ஆர்.சி புத்தகங்களை கண்டுபிடித்து ஒப்படைக்க அவர்களுக்கு 5 நாட்கள் அவகாசமும் வழங்கினார் செவ்வாய் கிழமையுடன் அவகாச காலம் முடிந்த நிலையில் காணாமல்போன ஆர்.சி புத்தகங்களை கண்டுபிடிக்கமுடியவில்லை செவ்வாய் கிழமை காலையில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் ஐ.ஏ.எஸ், தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டார். மேலும் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் போக்குவரத்து ஆணையர் மணக்குமார், இணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன், தென் சென்னை இணை ஆணையர் ஜெயசங்கரன் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.இந்த ஆய்வை தொடர்ந்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஆர்.சி புத்தகம் காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆ.சி புத்தகங்கள் காணாமல்போன விவகாரத்தில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணி புரியும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி மற்றும் காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி மற்றும் தாமோதிரன் ஆகியோரை தற்காலிக பணியிட நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.ஆர்.சி புத்தகங்கள் தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவிலேயே வருகின்றன. அவற்றை யாரோ திட்மிட்டு எடுத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆர்.சி புத்தகங்கள் விவகாரத்தில் 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Articles

Back to top button
Close
Close