fbpx
Others

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரம்–சிபிஐ அதி​காரி​கள்விசா​ரிக்கின்றனர்.

தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடை​பெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்தை சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்றனர். அவர்களின் விசாரணையை, உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழுகண்காணித்துவருகிறது. புஸ்ஸி ஆனந்தை தொடர்ந்து இவருக்கும் இப்படியா…! தவெக நிர்வாகிகளுக்கு  அடுத்தடுத்து அடி! - karur court rejects bail plea of ​​tvk executive  pavunraj in karur stampede case - Samayam Tamilஇந்த வழக்​கில், டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிசம்பர் 29) நடை​பெறும் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், தேர்​தல் மேலாண்மை பிரிவு பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, மாநில இணைச் செய​லா​ளர் சிடிஆர்​நிர்​மல்​கு​மார், கரூர் மேற்கு மாவட்​டச் செயலா​ளர் வி.பி.ம​தி​யழகன், காவல் கண்​காணிப்​பாளர் ஜோஷ் தங்​கை​யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன், டிஎஸ்பி செல்​வ​ராஜ், கரூர் நகர ஆய்​வாளர் ஜி.மணிவண்​ணன் ஆகியோ​ருக்கு சம்மன் அனுப்​பப்​பட்​டது.இந்​நிலை​யில், கரூர் ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் இன்று டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதையடுத்​து, நேற்று முன்​தினம் அவர் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகினார்.இன்று ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோரிடம் 7 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் பிரச்சாரக்கூட்டத்துக்குவிஜய்தாமதமாக வந்தது பற்றியும், 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close