தவெக கட்சி தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தனகிரி கோவிலில் சிறப்பு பூஜை..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர தமிழக வெற்றி கழக சார்பில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு , வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக வேண்டுமென சிறப்பு பூஜையாக ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்து மற்றும் உற்சவருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத்தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர செயலாளர் பி வினோத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை ஜி மோகன் கலந்துகொண்டு தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இதில் சரவணன், அஜித் குமார் ,தீபக், பிரகாஷ், தினேஷ், கண்ணன், ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட, நகர , ஒன்றிய முக்கிய பொறுப்பாளர்கள்,மாவட்டம மகளிர் அணி, கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.