fbpx
Others

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் தலசீமியா எனும் கொடிய நோய்

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேகமாக பரவி வருக தலசீமியா நோய்க்கு சிகிச்சை பெறுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. உலகில் மனிதர்களுக்கு புது புது நோய்கள் அறிமுகமாகி கொண்டிருக்கும் வேளையில் அவற்றுக்குமருந்துகள்கண்டுபிடித்த வண்ணம்தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

. ஆனால், எய்ட்ஸ் போன்ற கொடுமையான நோய்க்கு நிறைந்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது போல தமிழ்நாட்டில் உள்ள தலசீமியா என்ற கொடிய நோய்க்கும் இன்னும்மருந்துகண்டுபிடிக்கப்படவில்லை.தமிழ்நாட்டில் குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் வாழும் சித்தேரி மலை பகுதியில் சித்தேரி, சூரியக்கடை, சிக்கிளிங், வள்ளி மதுரை, அழகூர், நலமங்கடை உள்ளிட்ட கிராமங்களில் தலசீமியா என்னும்கொடுமையானநோய்தாக்கிவருகிறது.இந்தநோய்பாதிக்கப்பட்டவர்களுக்கு  15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை ரத்தம் மாற்றப்பட வேண்டும். இதனை வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டியநிலைஇருந்தது .இதையடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மலைவாழ் மக்கள் தருமபுரி மருத்துவமனையில் தொடங்கப்பட்ட தலசீமியா நோய் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்நோய்க்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள சுமார் ரூ.20 லட்சம் செலவாகிறது. வசதி படைத்தவர்கள் காப்பீடு திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொகையை பெற்று மீதத்தை தங்களது சொந்த பணத்தில் இருந்து கொடுக்கிறார்கள். ஆனால், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் நோயாளிகளின் நிலை கேள்விகுறியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close