fbpx
Others

தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்க E.P.S தயாரா…?

மத்திய அரசு பிளாக் மெயில் செய்கிறது - முதல்வர் மு.க. ஸ்டாலின் / Central  Govt is black mailing says CM MK Stalinதமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையல், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்திடும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. வெற்றி நிச்சயம். அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே இலட்சியம். அந்த உறுதியுடன்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமைக் கட்சிகள் அடங்கியமதச்சார்பற்றமுற்போக்குக்கூட்டணியுடன்2026சட்டமன்றத்தேர்தல்களத்தைச்சந்திக்கிறது.திராவிடமாடல்2.0அரசுஅமைந்தேதீரும்.மார்ச்17ஆம்நாள்முதல்,அண்ணாஅறிவாலயத்தில் கழகத்தின் சார்பில் விருப்பமனுஅளித்தவர்களிடம்நேர்காணல்நடத்திவருகிறேன்.உங்களில் ஒருவனான என் முகம் காண நேர்காணலில் நீங்கள் எந்தளவு ஆர்வம் காட்டுகிறீர்களோ, அதைவிடக்கூடுதல்ஆர்வத்துடன்உடன்பிறப்புகளானஉங்களின்முகம்காணநான்விரும்புவதால்தான், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு,முதன்மைச்செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் பல மணிநேர அளவில் நேர்காணல் நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதிவாரியாக நேர்காணல் செய்தபோது, ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் மக்கள் பெற்றுள்ள பலன்கள்தான், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருக்கப்போகின்றன என்பதைச் சொல்லத் தவறவில்லை. ஒருவர், மகளிர் உரிமைத் தொகை பற்றி சொன்னால், இன்னொருவர் விடியல் பயணம் பற்றி விளக்கினார். மற்றொருவர், புதுமைப்பெண் என்றதும், உடனே, ‘நான் முதல்வன்’ திட்டத்தால் தங்கள் ஊரில் பயன் பெற்றவர்களைப் பற்றி அடுத்தவர் சொல்கிறார். தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, தாயுமானவர் திட்டம், கலைஞர் கனவு இல்லம் எனச் சாதனைகளால் நிறைந்த 5 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி ஒவ்வொருவரும் குறிப்பிட்டு, கழக ஆட்சிதான் தொடரும் என்ற உறுதியையும் வழங்கினார்கள்.தமிழ்நாடு-2030 எனும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும், அதனை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றுகின்ற வகையிலும், கூடுதல் அம்சங்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய தேர்தல் அறிக்கை என்றால் அது நமது கழகத்தின் தேர்தல் அறிக்கைதான்கடந்த ஐந்தாண்டுகாலஆட்சியைச்சிறப்பாகநடத்தினோம். ஆனால், அது நமக்கு எளிதானதாக இல்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத – பழிவாங்கும் போக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு, மாநில உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, ஜனநாயகம் காக்கும் அறப்போர்க்களத்தில் நின்றபடியேதான் எண்ணிக்கையில் அடங்காத சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அதனால்தான், 2026 தேர்தல் களத்தைத் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்குமான தேர்தல் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது.Tamil Nadu: EPS in a dilemma over future of AIADMK எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா?  தமிழ்நாட்டில்நிறைவேற்றப்படாமல்முடக்கப்பட்டிருக்கும்திட்டங்களைநிறைவேற்றவேண்டும்எனவலியுறுத்துவதற்காகவா? மாநிலஉரிமைகளைக்காப்பாற்று வதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறனர். தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.தமிழ்நாட்டின் உரிமைகளைக்காப்பதற்கும்,தமிழ்நாட்டைவளர்ச்சிப்பாதையில்கொண்டுசெல்வதற்குமான    வலிமைதி.மு.கதலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம். களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

.

Related Articles

Back to top button
Close
Close