fbpx
Others

தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு ….

மின் கட்டணம் உயர்வு

மின்கட்டணம் உயர்வு குறித்து முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, “ 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற  பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close