fbpx
Others

தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான கிராமமா…..?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் 162.கெண்டிரச்சேரி கிராமம்,வடக்கு காலனியில் வசிக்கும் பொது மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்கு நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளில் முதன்மையான சாலை வசதி இல்லை.தற்போது வரை ஏரிக்கரையை தான் வழியாக பயன் படுத்தி வருகின்றனர்.  அத்தியவசப் பொருட்கள் வாங்கவோ , பள்ளி/கல்லூரி செல்லவோ, மருத்துவ அவசர தேவைக்கு செல்லவோ முடியாமல் சிரமத்தில் இருக்கின்றனர்.  அவசர ஊர்தியும் வருவதில்லை , மாணவர்கள் பள்ளி நடந்து செல்ல கற்கள்,முட்கள்,சரிவு, மேடு, பள்ளம் இருப்பதால் நடந்து செல்ல முடிவதில்லை , பள்ளி வாகனம் வருவதில்லை,ஆகவே பள்ளிக்கு செல்வதில்லை என்கின்ற நிலை உருவாகி வருகின்றது.பணிக்கு செல்ல வாகனம் எடுத்து செல்ல முடிவதில்லை.முக்கியமாக அத்தியவசப் பொருட்கள் வாங்க மழை காலங்களில் நடந்து செல்ல முடியாத காரணத்தால் தஞ்சம் புக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இரவு நேரங்களில் ஊர் திரும்பும் போது அவர்கள் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை.  ஆகையால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது அவர்களின் நீண்ட கால பேராட்டமாக இருந்து வருகின்றது.  அரசுஉடன்குறைதீர்க்குமா ….? மக்கள் ஏக்கம்….

Related Articles

Back to top button
Close
Close