fbpx
Others

தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப பயிற்சி கோரிக்கை !!

: தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப பயிற்சிக்கு தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் கோரிக்கை !! தமிழ்நாடு சந்த் மகா சபா மாநில பொது செயலாளர் .கே.கணேசன் அவர்களின் 59 வது பிறந்தநாள் விழா சென்னை திருவொற்றியூர் பூந்தோட்ட விளையாட்டு திடலில்ல நடைபெற்றது.இந்த விழாவில்சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிசிவக்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது;தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க தற்காப்பு விளையாட்டு சிலம்பம்.
இது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரம் பெற்றதோடு பள்ளி விளையாட்டாகவும் அங்கீகாரம் பெற்று இருக்கிறது.அரசு போதிய அளவில் சிலம்பத்திற்கு ஆதரவளித்து அரசு பள்ளிகள் மட்டுமல்லாது அனைத்து பள்ளிகளிலும் சிலம்பத்தை கற்றுத் தருவதற்கு உரிய ஏற்பாட்டை செய்வதோடு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இருப்பதைப் போல் சிலம்பத்திற்கு தனியாக ஒரு ஆசிரியரை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும் .
அதன் மூலம் மாணவர்களை சிறந்த முறையில் சிலம்ப வீரர்களாக உருவாக்கி. உடல்நலம் .உடல் பலம் பெறுவதோடு அறிவு கூர்மையும் சிலம்பத்தின் மூலம் கிடைக்கும்.
இங்கே மாணவர்கள் மிக அற்புதமாக சிலம்பம் விளையாடிகிறார்கள் யுத்த வர்மா சிலம்ப கழகத்தின் தலைவர் சண்முகம் அந்த மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார் அவரை பாராட்டுகிறேன். அதேபோல தமிழ்நாடு சிலம்பக் கழக தலைவர் ..ஞானம் ஆசான் துணைத் தலைவர் முருகக்கனி ஆசான் அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள் தமிழ்நாடு முழுக்க இந்த சிலம்பம் சிறந்த முறையில் வளர்ச்சி பெறுவதற்கு அவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்பதை அறிந்தேன்.விரைவில் அரசாங்கம் அதற்குரிய வழிகளை காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆகவே எதிர்காலத்தில் சிலம்பம் மிக சிறந்த ஒரு வளர்ச்சியை அடையும் என நம்புகிறேன்.இவ்வாறு பேசினார்.இந்த விழாவில் ஜெய் கணேஷ் டாக்டர் செல்வகுமார் வழக்கறிஞர். ஹேமலதா சக்தி அம்மா. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close