fbpx
Others

தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்…பின் அதிரடிமாற்றம்…..,

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.. பட்ஜெட் முடியட்டும்.. முதல் வேலை இதான்! பதறும் தலைகள்.. அதிரும் கோட்டை

 முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் .கடந்த புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.அவர்கள் பணியில் சேர்ந்த வருடம், அவர்கள் பணியாற்றிய துறைகளின் அனுபவம் ஆகியவற்றை வைத்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேருக்கு sele

 ction grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.அதன்பின் குடியரசு தினம் முடிந்ததும் மீண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம் ஆட்சியராக பழனி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மேகநாத ரெட்டி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்தான் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்பாக மீண்டும் முதல்வர் ஸ்டாலின் சில ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுவார் என்று கூறப்படுகிறது. 023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பட்ஜெட்டிற்கு பின்பாக தலைமை செயலகத்தில் இருக்கும் முக்கியமான சில ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து இருக்கிறாராம். தற்போது மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் கோட்டையிலும் அதிகாரிகளை செயல்பாடுகளை ஆய்வு செய்ய இருக்கிறாராம். இதில் சரியாக செயல்படாத, துறை ரீதியாக சரியான நடவடிக்கைகளை எடுக்காத அதிகாரிகள் மீது ஆக்சன் எடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். பட்ஜெட்டுக்கு பின் பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி காலியாக உள்ளது. பல ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் நடந்தும் கூட இந்த பொறுப்பிற்கு மட்டும் ஆணையர் நியமனம் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் முடிந்த பின் அந்த இடம் நிரப்பப்படவில்லை. இவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலமும் மொத்தமாக முடிவிற்கு வந்தது. இவர்களின் பதவி மட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த நியமனத்தோடு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

Related Articles

Back to top button
Close
Close