fbpx
Others

தமிழ்நாடு – தேனி–விடுமுறையை ஒட்டி கள்ளச் சந்தையில் மது விற்பனைபடுஜோர் ?

தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் கூடலூர்- மற்றும் அனைத்து ஊர்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை படுஜோர் ??? மதுவிலக்கு இயலாதென்றால் கள்ளச்சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்துவாரா தேனி மாவட்ட ஆட்சியர்….. அல்லது கள்ளச்சந்தை வியாபாரத்தை களையெடுப்பாரா…

   பொதுமக்கள்கோரிக்கை ?    தேனி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் !!! அதைவிடுத்து டாஸ்மாக்கிற்கு விடுமுறை என்பது ஒரு கேடா.?    மதுவிலக்கை அமல்படுத்தாத தமிழகத்திற்கு டாஸ்மாக் விடுமுறை எதற்கு.?   அரசியல் பிரமுகர்கள் பல லட்சங்களை வாரி குவித்து கள்ளச் சந்தை வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்திடவா…?   தேனி மாவட்டம் கூடலூரில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. அந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் ஒட்டியும், இரண்டு அரசு மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றது. ?  இந்த இரண்டு பார்களிலும் அரசு விடுமுறை தினம் மற்றும் டாஸ்மாக் திறக்கப்படாத நேரம் அதிகாலை 05 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு 12 மணிவரை “சட்டம் என்பது சளைத்தவனுக்கும் சாமானியனுக்கு மட்டும்தான் செல்லும்” என்பதை போல சகல அதிகார பலத்தோடு மதுபான விற்பனைக்கு கால, நேரம் என்பது ஏதும் இல்லை என்ற தாரக மந்திரத்தோடு 24 மணிநேரமும் இந்த இரண்டு பார்களில் கள்ளச் சந்தை வியாபாரமானது கணக்கச்சிதமாக அரங்கேறி வருகின்றது என கூடலூர் நகர சமூக நலன்விரும்பிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்..???  இந்த இரண்டு அரசு மதுபான கடைகளும் இக்கடைகளுக்கு ஒட்டியவாறு உள்ள அரசு மதுபான பார்களும் பள்ளிகள், பேருந்துநிலையம், கோயில்கள், வணிக தளங்கள் மற்றும் வங்கிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்பட்டு வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது….கூடலூர் நகராட்சியில் வரவிருக்கும் மூன்று நாள் விடுமுறையை ஒட்டி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்திட அரசு மதுபானக் கடை ஊழியர்கள் ஒத்துழைப்போடு இன்றிலிருந்தே மதுபானங்களை பதுக்கும் கள்ளச்சந்தை வியாபாரிகள். கண்காணிக்கப்பட வேண்டிய அத்தனை துறைகளும் மாலை அணிந்து மௌன விரதப்போக்கை கடைபிடித்து வரும் அவலம் நீடித்து வருவதாக கூடலூர் நகர மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்போடு ரூபாய் 135-க்கு மதுபானங்களை பெட்டிகளாக வாங்கி, அதை மூட்டைகளாக்கி ஓரிடத்தில் பதுக்கி வைத்துக்கொண்டு விடுமுறை தினமும், விடுமுறை அல்லாது டாஸ்மார்க் திறக்கப்படாத நேரமும் ரூபாய் 200 முதல் 250 ரூபாய் வரை ரூபாய் 70 முதல் 130 வரை கூடுதல் விலை நிர்ணயம் செய்து கள்ளச்சந்தையில் மதுபானங்களை ஆறாக ஓடவிட்டு குடிமகன்களின் குடும்பங்களை தத்தளிக்க விட்டு வருகின்றனர் என்றும், அதை கண்காணிக்கும் துறையினர் கைகட்டி ஜோராக வேடிக்கையும் பார்த்து வருகின்றனர் எனவும் சமூக நலன் விரும்பிகள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர் !!!  கள்ளச்சந்தை விற்பனைக்கு சாதகமாக அந்தந்த அரசு டாஸ்மாக் ஒட்டி செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் பாரும், பாரை எடுத்து நடத்துபவர்களும் சீரும் சிறப்புமாக கள்ளச் சந்தை வியாபாரத்தை மெருகேற்றி வருகின்றனர் !!! இவையெல்லாம் அதிகாரிகள் ஆசீர்வாதத்துடன் தான் நடக்கிறது ?  ஆக மொத்தத்தில் கள்ளச்சந்தை வியாபாரம் 24 மணிநேரமும் படுஜோராக அரங்கேறி வருகின்றதென்பது நாம் கண்ட களநிலவர கன்றாவிகள் என்பது மட்டும் நிதர்ஷனமான உண்மை !!!  அன்றாட வாழ்வில் ஒரு சாண் வயிற்றுக்காக உழைக்கும் மக்களை கூட வியாபாரிகள் விட்டு வைப்பதில்லை….சகலவித அதிகார பலத்தோடு 24 மணிநேரமும் கள்ளச்சந்தையில் மதுவை ஊற்றிக் கொடுத்து சாமானிய, மற்றும் நடுத்தர குடும்பங்களை அனுதினமும் நடுக்கடலில் தத்தளிக்க விட்டு வருகின்றார்கள் !!!  மேலும், தேனி மாவட்டத்தில் கள்ளச்சந்தை வியாபாரம் எனும் நஞ்சு கொண்ட ஒர் கொடிய மரத்திற்கு டாஸ்மாக் ஊழியர்களின் ஒத்துழைப்போடு ஒரு டாஸ்மாக் கடைக்கு 03 அல்லது 04 கள்ளச்சந்தை வியாபாரிகள் கிளைகளாக செயல்பட்டு சாமானியர்களை அழிவின் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது நாம் கண்ட களநிலவரத் தகவல் !!!  அதுசமயம், இது பொதிகை TV காலம் அல்ல. 5G காலம் என்பதை கருத்தில் கொண்டு, திராணி இருந்தால் மதுவிலக்கை அமல்படுத்துங்கள். … ஆறாய் ஓடும் கள்ளச்சந்தை வியாபாரத்தை தடுத்து நிறுத்துங்கள். அதைவிடுத்து டாஸ்மாக்-கிற்கு விடுமுறையெனும் கபடநாடகத்தை மட்டும் அரங்கேற்றாதீர்கள்!!!  இவற்றை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?  என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்!!!……..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close