fbpx
Others

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசியது…..?

ஆளுநர் ரவி

வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலளிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும் ஏற்க முடியாது என கூறினர். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், சரணடைய மறுக்கும் எந்த ஒரு ஆயுத குழுவுடனும், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார்.தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும் எனவும் ஆர்.என் ரவி பேசினார்.மும்பை தாக்குதலால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சி அடைந்ததாகவும்,  ஆனால், தீவிரவாதத்தால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அப்போதைய இந்தியா- பாகிஸ்தான் பிரதமர்கள் கையெழுத்திட்டதாகவும் . காங்கிரஸ் அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்தார்.பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், இரண்டிற்கும் நடுவே என்ற ஒரு நிலையை பின்பற்ற முடியாது என என்றும் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close